ஆத்திரேயன்

முடிச்சிகளை அவிழ்க்க இயலாத நூல்…

தினம் கொள்ளும் கனவு…

பல முறை மரணத்திடம் தோற்றாகிவிட்டது, எனது விடியல்கள் இருளாகவே இருக்கிறது. எனக்கு முன் நடந்தவர்கள் ஆணியின் மீதும் சுவடு பதியாத கற்களின் மீதும் நடந்து சென்று விட்டனர், எனக்கான பாதையை இப்போது நானே கண்டுபிடிக்கவேண்டும், வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக இல்லை. வெற்றி என்பதை சுவைபதற்கு முன்னாள் கடல் காடியை பலமுறை ருசிக்க வேண்டியிருக்கிறது.

என் கனவில் காடு தெரிகிறது, உள்புக முயற்சித்து வென்றும் தோற்றும் வெளிச்சக்கீற்றுகள், பசேல் என இலைகளும், காய்ந்த சருகுகளுமாய் என்னை சுற்றி.       எறும்பு ஊரும் சத்தம் கேட்குமளவுக்கு அமைதி.   என் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டபடி கிடக்கிறேன் என்னை சுற்றி இருவரை தவிர கூட்டமாய் வெறுமை. துப்பாகியுடன் இருக்கும் இவர்களை விட இந்த வெறுமை என்னை மிகவும் அச்சுறுத்துகிறது.
பறவைகளிட்ட துளையினூடே புகுந்து வரும் காற்று, ஆயிரம் பிக்கோலோக்களையும் பான்குழல்களையும் நினைவுபடுத்துகிறது. அவைகளை நான் சிறுவயது முதலே ரசித்திருக்கிறேன். இரவுகளுக்கு அப்பால் இந்த வேறுமையையையும் நான் வெறுக்கிறேன், அவை என்னை அச்சுறுத்துவதால் மட்டுமல்ல என் எதிரிகளையும் அச்சுறுத்துவதால்.
இருவரில் ஒருவருடைய துப்பாக்கி விரைவில் வெடிக்கும். அந்த சத்தம் என் கனவை கலைக்கும் அது என்னை வேதனைக்குள்ளாக்கியது, நான் மரிப்பதை நான் பார்க்கவேண்டும் என்னை சுற்றி அவன் செய்யும் ஏளனம் எனக்கு தெரியவேண்டும், என்னை அவன் அம்மணமாக்கலாம் எட்டி உதைக்கலாம் அதை நான் பார்க்கவேண்டும். என் சகோதரனை அவன் அப்படித்தான் செய்தான், என் சகோதரியையும் அப்படித்தான் செய்தான்.       அசைவற்று கிடந்த என் சகோதரியின் யோனியை அவன் நக்குவதை நான் பார்த்திருக்கிறேன், அவன் என் சகோதரிகளை படர்ந்த அந்த பழைய மரத்தின் கிளைகளில் அம்மணமாக தூக்கிலேற்றினான் என்னால் அவனை தடுக்க முடியவில்லை என் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தது, இப்போது என்னை நோக்கி அவனுடைய துப்பாக்கி   உன்னை முத்தமிடதான் காத்துகிடக்கிறேன் என்று எண்ணியபோது அவன் விரல்கள் தோட்டாக்களை துப்பாக்கியைவிட்டு சுதந்திரமடைய செய்தது நான் சாய்கிறேன் சருகுகள் என்னை தாங்கின செந்நிறமாய் மாறியது சருகுகளும்  நிலமும் .
நான் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறேன் ஆனால் என் கனவில் என் கைகள் இன்னமும் கட்டப்பட்டு, சுடுவதற்கு தயாரான நிலையில் அவன். மீண்டும் முதலிலிருந்து துவங்குகிறது கனவு, இம்முறை அது காட்டின் கனவு.
பழைய வரவுகள் »
Follow

Get every new post delivered to your Inbox.